புழல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட துணை அமைப்பாளர் ஜி.கே.இனியன் தலைமையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி சீருடை, பேக், ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், துணை அமைப்பாளர்கள் கேபிள் த.கணேசன், சிஎஸ்எஸ்டி. சீனிவாசன், டிஜிஆர்.மணிவண்ணன், புழல் ஒன்றிய திமுக பொறுப்பாளர் வடகரை சி.அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் எம்எல்ஏவுமான எஸ்.சுதர்சனம், மாநில திமுக இளைஞர் அணி துணை செயலாளரும், சென்னை மண்டல பொறுப்பாளருமான தூத்துக்குடி எஸ்.ஜோயல் ஆகியோர் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆர்.முருகன், நா.ஜெகதீசன், மு.ரமேஷ், புழல் ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், ஒன்றிய கவுன்சிலர் ப.சிவக்குமார், திமுக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.