×
Saravana Stores

கோவை அண்ணா பல்கலையில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா: டெண்டர் கோரியது அரசு

சென்னை: கோவையில் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 2022- 2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, காரைக்குடியில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

அதன்படி கோவை பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சம் செலவில் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் டெண்டர் கோரியுள்ளது. பல்கலை வளாகத்தில் உள்ள டிட்கோ உயிரி தொழில்நுட்ப பூங்காவில் இந்த ஆராய்ச்சி பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி பூங்கா அமையும்.

The post கோவை அண்ணா பல்கலையில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா: டெண்டர் கோரியது அரசு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Coimbatore ,Chennai ,Government of Tamil Nadu ,Madurai ,Trichy ,Nellai ,Karaikudi ,
× RELATED அண்ணா பல்கலை மாஜி துணைவேந்தர்...