- போலீஸ் மாநாடு
- சென்னை
- தமிழ்நாடு காவல்துறை
- தமிழ்நாடு காவல்துறை மாநாடு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- போலீஸ் மாநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தமிழ்நாடு காவல்துறை மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்துவது தொடர்பாக இதர தென் மாநிலங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றார்.
அண்டை மாநில காவல் துறை இயக்குநர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் நடந்த நிகழ்வில் மாநிலங்களுக்கிடையேயான சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், பயங்கர வாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குறித்தும், தீவிரவாதப்படுத்துதல் ஆகிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையே செயல்படும் குற்றவாளி குழுக்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான இந்த பரிந்துரைகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மற்ற மாநிலங்களை ஒருங்கிணைந்து செயல்படும் பொறுப்பு தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை, இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை செயல்படுத்துவது தொடர்பாக இதர தென்மாநிலங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும்.
The post காவல்துறை மாநாட்டு பரிந்துரைகளின்படி இதர மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.