- பகுஜன் சமாஜ் கட்சி
- தவேகா கட்சி
- விஜய்
- சென்னை
- மாநில துணைத் தலைவர்
- பகுஜன் சமாஜ்
- கடி சந்தீப்
- தமிழ்
- நாடு வெற்றி கழகம்
- ஜனாதிபதி
- மத்திய அரசு
- இந்திய தேர்தல் ஆணையம்
- இந்திய அரசு
சென்னை: பகுஜன் சமாஜ் கட்டியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் சந்தீப் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கபட்ட மத்திய அரசின் அரசிதழ் விதிகளின்படியும் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி ஒரு கட்சி, தங்களுக்கென ஒரு கொடி இருந்தால் அந்த கட்சி கொடியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வழங்கப்பட்ட சின்னத்தை போன்றோ, மற்ற கட்சிகளின் சின்னத்தை போலவோ அல்லது சின்னத்தின் மாற்று போன்றோ தங்கள் கொடியில் சின்னங்கள் அமையாமல் கவனித்து கொள்ள வேண்டியது அக்கட்சியின் தார்மீக பொறுப்பாகும்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை கட்சி கொடியில் வைத்திருப்பது விதியை மீறுவதாக உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி வெளியிட்ட நாளிலிருந்து இதை வலியுறுத்தி வருகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சேபம் தெரிவித்த நிலையில் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் அணியின் அறிவிப்பை இணைத்துள்ளோம். இதனையே சட்ட முறையான அறிவிப்பாக கருதி கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்று அறிவுருத்துகிறோம். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
The post கட்சி கொடியிலிருந்து யானை சின்னத்தை நீக்க வேண்டும்: தவெக கட்சி தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ் appeared first on Dinakaran.