கரூர், அக். 19: கரூர் மதுரை மற்றும் சேலம் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளில சாலையோரமே கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது.
இதனால், அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதே போன்ற நிகழ்வு, கரூர் மதுரை பைபாஸ் சாலை பகுதியிலும் நடைபெற்றது. அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் கோவை சாலை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, எனவே, இவற்றை கண்காணித்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
The post பைபாஸ் சாலையில் குப்பைகள் எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு appeared first on Dinakaran.