×

ஜல்லிக்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

காரிமங்கலம், அக்.19: காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும், டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியில் சோதனை நடத்திய போது, சட்ட விரோதமாக 3 யூனிட் ஜல்லி கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் லாரியை காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜல்லிக்கற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Department of Minerals and Revenue ,Madlampatti National Highway ,
× RELATED காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு