×
Saravana Stores

என்கவுன்டரை விசாரிக்க நியமிக்கப்பட்ட டிஎஸ்பியை பணி மாறுதல் செய்வதா? எடப்பாடி கேள்வி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளர் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி பிரமுகரையும் மற்றும் ஒருவரையும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் கொடுமைப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணைய தலைவர்மணிக்குமார், ஆணையத்தின் துணை காவல் கண்காணிப்பாளரை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பாக திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி மற்றும் சீசிங் ராஜா ஆகிய மூவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்தும் விசாரிக்க அதே துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவிற்கு அரசு பணி மாறுதல் செய்துள்ளது. இந்த நிகழ்வு பல சந்தேகங்களை எழுப்புகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசால் ஆணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரை, மாநில மனித உரிமை ஆணையத்தில் பொறுப்பேற்கவிடாமல் திருப்பி அனுப்பியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post என்கவுன்டரை விசாரிக்க நியமிக்கப்பட்ட டிஎஸ்பியை பணி மாறுதல் செய்வதா? எடப்பாடி கேள்வி appeared first on Dinakaran.

Tags : DSP ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Kanchipuram ,Sivakanchi police station ,Edappadi ,Dinakaran ,
× RELATED திமிரி அருகே தினந்தோறும் மக்கள்...