×

பருவமழையை முன்னிட்டு ஓடைகள் தூர்வாரும் பணி தீவிரம்

 

ராஜபாளையம் அக்.18: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் முன்னெடுப்பில் நகரில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் மற்றும் ஓடை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகராட்சி ஆணையாளர் நாகராஜ், பொறியாளர் ஷெரீப், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் இப்பணிகளை செயல்படுத்தி மேற்பார்வையிடுகிறார்கள்.

இதுகுறித்து நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் கூறுகையில், பொதுமக்கள் குப்பைகளை ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டாமல் உரிய இடங்களில் போட வேண்டும். நகரை சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக நகராட்சி ஊழியர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

The post பருவமழையை முன்னிட்டு ஓடைகள் தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar district ,Rajapaliam Municipality ,Mayor ,Bavithra Shyam ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்