×

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தகுதி பெற்றனர்

 

கோபி,அக்.18: ஈரோடு மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் கோபி அருகே உள்ள நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில் 14 வயதுக்குட்பட்ட இளையோருக்கான பிரிவில் பள்ளி மாணவியர் அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போன்று மாணவர்களுக்கான இளையோர் பள்ளி அணி மூன்றாமிடம் பிடித்தது. அதே போன்று 14 வயதுக்குட்பட்டோருக்கான தடகள போட்டியில் பள்ளி மாணவன் ஜீவ நிகிலேஷ் 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் இரண்டாமிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ,மாணவியரை பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் என்.கே.ஜவஹர் இணைச்செயலாளர் சுமதி ஜவஹர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். மேலும் மாணவ, மாணவிகளை மாநில அளவிலான போட்டிக்கு தயார் படுத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணபவ, இந்துமதி ஆகியோரையும் பாராட்டினர்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

The post மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தகுதி பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Kamaraj High School ,Kobe ,Nambiur Kamaraj Secondary School ,Gobi ,Erode ,Dinakaran ,
× RELATED நீர் வரத்து அதிகரிப்பு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை