×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

 

ஈரோடு, அக். 16: ஈரோட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் மாநகராட்சி ஆணையர் மணிஷ் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், ஈரோடு மாநகராட்சியிலும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், கடந்த பருவமழை காலத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நேற்று மாநகராட்சி ஆணையர் மனிஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்க ஓடையை முறையாக தூர்வாரவும், பராமரிக்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து, வைராபாளையத்தில் உள்ள மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கில் ஆணையர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, 1ம் மண்டல தலைவர் பழனிசாமி, உதவி ஆணையர் அண்ணாத்துரை, செயற்பொறியாளர் பிச்சைமுத்து, சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் சதீஷ், வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Erode ,Commissioner ,Manish ,Pichaikaranpallam stream ,Tamil Nadu ,Erode Corporation ,North East ,Monsoon ,Pichaikaran Pallam stream ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை : அனைத்துப் பள்ளித்...