×

பன்றிகள் வளர்க்க தடை

காரைக்குடி, அக். 18: காரைக்குடி மாநகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: காரைக்குடி மாநகராட்சி எல்லைக்குள் பன்றிகள் வளர்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி எல்லைக்குள் பன்றிகள் வளர்ப்போர் 7 நாட்களுக்குள், அதாவது வரும் 24ம் தேதிக்குள் தங்களது பன்றிகளை பிடித்து மாநகராட்சி எல்லைக்கு அப்பால் வெளியில் கொண்டு செல்ல வேண்டும். தவறும்பட்சத்தில், 7 நாட்களுக்கு பிறகு இந்த எல்லைக்குள் சுற்றித்திரியும் பன்றிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி சார்பில் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post பன்றிகள் வளர்க்க தடை appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaikudi Municipal Corporation ,Commissioner ,Chitra Sukumar ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாதது ஏன்? : நீதிபதி