பல்லாவரம், அக். 18: சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு மணிக்கு 1380 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தது. இதனால், மழைப்பொழிவு நின்றதால், ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில் 13.79 அடி உயரம் நீரும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 1317 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. தொடர்ந்து, ஏரிக்கு 493 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
The post செம்பரம்பாக்கம் ஏரியில் 1317 மில்லியன் கனஅடி நீர் இருப்பு appeared first on Dinakaran.