×

அரசு ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

நாமக்கல், அக்.18: நாமக்கல்லில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சேலம், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜோதியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிமேகலை வரவேற்றார். மாநில தலைவர் மதுரை சங்கர்பாபு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ இன்சூரன்ஸ் மற்றும் குடும்ப ஓய்வூதியம் கால தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில் சென்னையில் 2025 மார்ச் 7ம் தேதி, சேப்பாக்கத்தில் உள்ள சமூக நலத்துறை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில துணை செயலாளர்கள் பாவாயி, ராஜாமணி, சேலம் மாவட்ட பொருளாளர் முத்தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Government Teachers Association General Committee Meeting ,Namakkal ,Salem ,Namakkal District ,General Committee ,Tamil Nadu Government Teachers, Women Village Welfare Officers and Supervisors Association ,Jyothiyammal ,District Secretary ,Manimegala ,State ,President ,Madurai… ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்