×
Saravana Stores

குண்டு மிரட்டல் விடுப்பவர்கள் இனி விமானத்தில் பறக்க தடை? விமானப்போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனை

புதுடெல்லி: கடந்த திங்கள்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை 19 இந்திய விமானங்களுக்கு எக்ஸ் தளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு எக்ஸ் பதிவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்வது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விமான நிறுவனங்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிவில் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது, “வெடிகுண்டு மிரட்டல் விடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கும் வகையில் தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக விமான நிறுவனங்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திடமும் ஆலோசித்து வருகிறோம். போலி வெடிகுண்டு மிரட்டல்களை சமாளிக்க வௌிநாடுகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள் பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம். மிரட்டல் விடுக்கும் நபர்கள் விமானங்களில் பறக்க தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

The post குண்டு மிரட்டல் விடுப்பவர்கள் இனி விமானத்தில் பறக்க தடை? விமானப்போக்குவரத்து அமைச்சகம் பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : Ministry of Aviation Review ,New Delhi ,Mumbai ,Frankfurt Airport ,Germany ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் விவகாரம் அனைத்து...