- துணை மாவட்ட பள்ளிகளின் அறிவியல் கண்காட்சி
- பாலகதி
- பாலக்காடு
- பாலக்காடு துணை மாவட்ட பள்ளிகளின் அறிவியல் கண்காட்சி
- கர்ணகியம்மன் நடுநிலைப்பள்ளி
- ரமேஷ்
- கல்வி அதிகாரி
- பாலக்காடு மாவட்டம்
- மேலாளர்
- கைலாசமணி
- சசிதரன் மாஸ்டர்
- பாலகத்தில் அறிவியல் கண்காட்சி துணை
- மாவட்ட பள்ளிகள்
- தின மலர்
பாலக்காடு, அக். 17: பாலக்காடு உப மாவட்ட பள்ளிகளின் அறிவியல் கண்காட்சி கர்ணகியம்மன் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. இந்த கண்காட்சியை பாலக்காடு மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ் தொடங்கி வைத்தார். கர்ணகியம்மன் மேல்நிலைப்பள்ளி மேலாளர் கைலாசமணி தலைமை தாங்கினார். சசிதரன் மாஸ்டர், வார்டு கவுன்சிலர் லட்சுமணன், பாலகோபால், கங்காதரன், அனூப் இப்ராஹம் ஆகியோர் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். பாலக்காடு உப மாவட்டத்தில் 80 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். 200 க்கும் மேற்பட்ட கண்காட்சி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (18 ம் தேதி) கண்காட்சி நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவை பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள் தொடங்கி வைத்து பேசுகிறார். முன்னதாக தலைமை ஆசிரியை நிஷா வரவேற்றார். முடிவில் சுபஸ நன்றி கூறினார்.
The post பாலக்காட்டில் உப மாவட்ட பள்ளிகளின் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.