- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கொழிஞ்சாம்பாறை
- நீலகிரி
- பாலக்காடு
- பாலக்காடு மாவட்டம்
- கோவை, தமிழ்நாடு
- நீலகிரி கொழிஞ்சாம்பாறை
பாலக்காடு, அக். 17: பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே அரிசி ஆலையில் ஆறரை டன் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் ஆலை உரிமையாளரை கைது செய்து விசாரிக்கின்றனர். தமிழகம் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுதாகவும், அவற்றை கேரளாவில் அரிசி ஆலைகளில் பாலீஸ் செய்து அதிக விலைக்கு விற்பனை நடப்பதாகவும் சித்தூர் மற்றும் கொழிஞ்சாம்பாறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில் சித்தூர் டி.எஸ்.பி கிருஷ்ணதாஸின் உத்தரவுப்படி கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் எஸ்.ஐ., பிரமோத், சீனியர் சிவில் போலீசார் கொழிஞ்சாம்பாறை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரிசி ஆலைகளை சோதனை போட்டனர்.
The post நீலகிரி கொழிஞ்சாம்பாறை அருகே அரிசி ஆலையில் ஆறரை டன் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.