×
Saravana Stores

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடி

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,531 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 16,196 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்திற்காக 800 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் 90.87 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 92 அடியாக உயர்ந்தது. கடந்த 2 நாளில் அணையின் நீர்மட்டம் 2.02 அடி உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 54.96 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடி appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Mettur ,Cauvery ,Okanagan Cauvery ,Mettur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது