×

இந்து சமய அறநிலையத்துறையில் 8 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்

சென்னை: அறநிலையத்துறையில் 8 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை நாமக்கல் உதவி ஆணையர் தமிழரசு சென்னை உதவி ஆணையர்-1, மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையர் ராமசாமி சென்னை உதவி ஆணையர்-3, விருதுநகர் உதவி ஆணையர் கணேசன் சென்னை உதவி ஆணையர்-4 ஆக பணி மாறுதல் செய்யப்படுகின்றனர். நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உதவி ஆணையர் ரமேஷ் நாமக்கல் உதவி ஆணையர் பொறுப்பையும், மதுரை உதவி ஆணையர் விஜயன் மதுரை கூடலழகர் கோயில் உதவி ஆணையராகவும், தேனி உதவி ஆணையர் கலைவாணன் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் துணை ஆணையராகவும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாகரன் விருதுநகர் உதவி ஆணையராகவும், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் உதவி ஆணையர் அருணாச்சலம் சங்கரன் கோயில் சங்கரநாராயணசுவாமி கோயில் துணை ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கின்றனர். …

The post இந்து சமய அறநிலையத்துறையில் 8 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Hindu ,Chennai ,Kumarubarubaran ,Department of the Department of State ,Kumarukurubaran ,Hindu Religious Foundation ,Dinakaran ,
× RELATED தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை