- கஸ்தூரி ராஜா
- சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம்
- சென்னை
- ககன் போத்ரா
- ஜார்ஜ் டவுன்
- கஸ்தூரி ராஜா
- முகன்சந்த் போத்ரா
- கஸ்தூரி ராஜா
- தின மலர்
சென்னை: திரைப்பட பைனான்சியர் ககன் போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என் தந்தை முகன்சந்த் போத்ராவிடம் 2012ல் கஸ்துாரி ராஜா 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதற்காக, கஸ்தூரி ராஜா வழங்கிய காசோலை வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து, கஸ்துாரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கஸ்துாரிராஜா, காசோலையை, நானும், என் தந்தையும் மோசடியாகப் பயன்படுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி தனி நபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
என் தந்தை இறந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. எனக்கு எதிரான இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக கஸ்துாரி ராஜாவை தண்டிப்பதோடு ஒரு கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தாமோதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், திரைப்பட இயக்குனர் கஸ்துாரி ராஜாவு நவம்பர் 15ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
The post பொய் குற்றச்சாட்டு கூறியதாக வழக்கு இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு சம்மன்: சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.