×
Saravana Stores

தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் உறுதி

சென்னை: உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை: துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த தவறான செய்திக்கு ஏற்கனவே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தீபாவளிக்குத் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் என்று கடந்த 14ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளேன். கோயம்புத்தூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் என்னுடைய அறிக்கையைப் படிக்காமல் பருப்பு விநியோகம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அவரின் பார்வைக்கு என்னுடைய அறிக்கையை அனுப்பியுள்ளேன். அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் நேற்று முன்தினம் வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. 2,040,8000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் விநியோகப்பட்டு விட்டன. மீதி விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன்.

The post தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Food ,Minister ,Chakrapani ,
× RELATED தீபாவளி பண்டிகை: உணவுப் பொருட்களை சுத்தமாக விற்பனை செய்ய அறிவுரை