×

காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள் 26ம் தேதி ஸ்டிரைக்

சேலம்: தனியார் காஸ் ஏஜென்சிகள் மூலம் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களை, வீடுகளுக்கு டோர் டெலிவரியாக சப்ளை செய்யும் பணியில் டெலிவரி மேன்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையான மாத ஊதியத்தை காஸ் ஏஜென்சிகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1,800 காஸ் ஏஜென்சிகளில் உள்ள சிலிண்டர் டெலிவரி மேன்கள் அடங்கிய அனைத்து எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி வரும் 26ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காஸ் சிலிண்டர் டெலிவரி மேன்கள் 26ம் தேதி ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வீட்டில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்