×
Saravana Stores

சென்னையில் மிரட்டிய மழை.. முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள்!!

சென்னை : சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் 54 மரங்கள் விழுந்த நிலையில் அவைகள் முழுமையாக அகற்றம் செய்யப்பட்டன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர்.கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை. மாநிலம் முழுவதும் 1,293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 77,877 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கத்திவாக்கம், மணலி புறநகரில் 25 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. கொளத்தூர், பெரம்பூர், அயப்பாக்கத்தில் தலா 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவொற்றியூர், மணலி, அண்ணாநகர், மேற்கு புழலில் தலா 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

The post சென்னையில் மிரட்டிய மழை.. முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED சென்னையில் கால்பந்து திடலை...