செய்யாறு, அக்.16: செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை 9 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அதன்படி வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 112 மையங்களில் 9 துறை சேர்ந்த பணியாளர்கள் கொண்டு நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தி.மயில்வாகனன், ஆ.ஷீலாஅன்பு மலர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வொன்றியம் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 5019 மாணவ, மாணவியர்களில் 93 சதவீத மாணவ மாணவியர்கள் காலை சிற்றுண்டி விரும்பி உண்டுள்ளனர். அதேபோல் செய்யாறு ஊராட்சி ஒன்றிய கிராமப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 86 மையங்களில் 9 துறை சேர்ந்த பணியாளர்கள் கொண்டு நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜா.கிரிஜா, த.ராஜன்பாபு ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
The post அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.