×
Saravana Stores

வடக்கை தொடர்ந்து தெற்கு பகுதிக்கு குறி இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 15 பேர் பலி

ஜெருசலேம்: காசாவில் கடந்த ஓராண்டாக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 10 நாட்களாக வடக்கு காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசாவிற்குள் எந்த நிவாரண பொருட்களும் நுழைய முடியாதபடி முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அங்குள்ள மக்கள் எங்கும் வெளியேற முடியாத படி வீடுகள், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். வடக்கு காசாவை முற்றிலும் அழிக்கும் முயற்சியை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெற்கு காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுப்படுத்தியது.

தெற்கு காசாவின் பெனி சுஹைலா நகரில் வீட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகினர். இதே போல பக்காரி நகரில் வீட்டின் மீது வீசப்பட்ட குண்டுவீச்சில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, லெபனானில் கடந்த 3 வார இஸ்ரேல் தாக்குதலில் 4 லட்சம் குழந்தைகள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

The post வடக்கை தொடர்ந்து தெற்கு பகுதிக்கு குறி இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 15 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,southern region ,Jerusalem ,northern Gaza ,southern ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் ராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா...