×

தென்மேற்கு விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை விலகி, வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கேரளா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அந்த பருவமழை தமிழகத்திலும் பெய்தது. இந்நிலையில், நேற்றுடன் தென்மேற்கு பருவமழை விடை பெற்றது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், ‘‘தென்மேற்கு பருவமழை நேற்றுடன் (அக்டோபர் 15ம் தேதி) நாடு முழுவதிலுமிருந்து விலகியுள்ளது.

அதே நேரத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நன்கமைந்த ஒரு குறைந்த அழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தெற்கு தீபகற்ப இந்தியா, தெற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடா பரப்பில் தொடங்கி நடுத்தர வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளது.

அதன் காரணமாக தமிழ்நாடு-புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் நேற்று பரவலாக பரவலாக மழை பெய்தது’’ என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையில் நேற்று வரையில் தமிழகத்தில் 84 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக பெய்துள்ளது. நேற்று தொடங்கிய வட கிழக்கு பருவமழை காரணமாக 40 இடங்களில் கனமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தென்மேற்கு விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Northeast ,Southwest ,Chennai ,India Meteorological Department ,South West ,North East ,Kerala ,Maharashtra ,Tamil Nadu ,North-East ,South-West ,
× RELATED வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!