- ஜூனியர் ஹேக்கத்தான் ஃபியூச்சர் கோடர்ஸ் மெகா எக்ஸ்போ
- ஆர்எம்கே கல்வி குழுமம் நிறுவனம்
- தலைவர் திருவள்ளூர்
- ஆர்எம்கே கல்வி குழுமம்
- கவரப்பேட்டை
- சென்னை
- திருவள்ளூர்
- தின மலர்
திருவள்ளூர்: கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே கல்வி குழுமங்களின் சார்பில் ஜூனியர் ஹேக்கத்தான் பியூச்சர் கோடர்ஸ் மெகா எக்ஸ்போ நடந்தது. இதில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் தங்கள் ஆய்வுகள் மற்றும் மென்பொருள் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்து, செயல்முறை விளக்கங்களை வழங்கினர். விவசாயம், மருத்துவம், கல்வி, மறுசுழற்சி செய்யக்கூடிய ஆற்றல், இந்திய கலாச்சாரம், இயந்திரவியல், பாரம்பரிய விளையாட்டுகள், மற்றும் செயல்திறன் கொண்ட தானியங்குதல் போன்ற துறைகளில் மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
இறுதி போட்டியில் பங்கேற்ற அணிகள் தங்கள் திட்டங்களை டிசிஎஸ், கூகுள் கிளவுட், வெர்டூசா, என்டிடி, டேட்டா, எச்சிஎல், சி.டி.எஸ்., போசன் மோட்டார்ஸ், கேப்ஜெமினி, எச்டிசி, ஹப்ஸ்ட்ரீம் போன்ற வல்லுநர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தனர். சமர்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கைகள், விவசாயம், மருத்துவம், கல்வி, மற்றும் பிற துறைகளில் வளர்ச்சியின் திறன், செயல்பாடு, மற்றும் சாத்தியமான தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் வெற்றி பெற்ற முதல் 3 அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக கோவூர், அமிர்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளிக்கு ₹1 லட்சமும், 2ம் பரிசாக கவரப்பேட்டை, ஆர்எம்கே பாடஷால பள்ளிக்கு ₹75 ஆயிரமும், 3ம் பரிசாக திருநின்றவூர், ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு ₹50 ஆயிரமும் ஆர்எம்கே கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அப்போது அவர் மாணவர்களின் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை பாராட்டி, அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இத்தகைய நிகழ்வுகள், இளம் மாணவர்களின் கற்றல் மற்றும் மென்பொருள் உருவாக்கத்திறனை மேம்படுத்தி, வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்கக் கூடிய மென்பொருள்களை உருவாக்கும் திறனை வளர்க்க உதவும், என்றார். விழாவில் துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், இயக்குநர் ஆர்.ஜோதிநாயுடு, ஆலோசகர்கள் எம்.எஸ்.பழனிச்சாமி, வி.மனோகரன் மற்றும் டீன்கள், முதல்வர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
The post ஜூனியர் ஹேக்கத்தான் பியூச்சர் கோடர்ஸ் மெகா எக்ஸ்போ வெற்றி பெற்ற அணிக்கு ரூ1 லட்சம் காசோலை: ஆர்எம்கே கல்வி குழும நிறுவன தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.