- திமுக இளைஞர் அணி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- என் கேவனும் மெளனா..!
- சென்னை மண்டலம்
- அன்பாகம்
- பேச்சுப் போட்டி
- மு.கே ஸ்டாலின்
சென்னை: கலைஞரின் நூற்றாண்டை, கொள்கைத் திருவிழாவாகக் கொண்டாடும் வகையில், திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான..!’ என்ற பெயரில் பேச்சுப் போட்டி மாநிலம் தழுவிய போட்டியாக நடைபெற்று வருகிறது. சென்னை மண்டலத்துக்கான போட்டி அன்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியாளர்களை வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, முதல்வர் இளைஞர் அணிக்கு மூன்று பொறுப்புகள் கொடுத்தார். அதில் மிகமிக முக்கியமான பொறுப்புதான் இந்தப் பேச்சுப்போட்டி. தேர்தல் நேரம், மற்ற பணிகளால் போட்டியை நடத்தி முடிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று, எதிர்பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட 17 ஆயிரம் பேர் தமிழ்நாடு முழுக்க விண்ணப்பித்திருந்தார்கள்.
முதல் பரிசு ரூ1 லட்சம், இரண்டாவது பரிசு ரூ75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என அறிவித்தோம். கலந்துகொண்ட அனைவருக்கும் அதாவது 17 ஆயிரம் பேருக்கும் பரிசு கொடுக்க எனக்கு ஆசைதான். இருந்தாலும், பரிசு கொடுக்க முடியாது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை எப்படி இருக்கிறதோ அதேபோல்தான் இளைஞர் அணி நிதி நிலைமையும் இருக்கிறது. அதனால், அடுத்த முறை இந்தப் பரிசுத்தொகை இன்னும் அதிகப்படுத்தப்படும். திமுக பேசி, எழுதி, வளர்ந்த இயக்கம். அந்தத் தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருகின்ற 19ம் தேதி இந்தப் போட்டிக்கான இறுதிப் போட்டியும், 20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கைகளால் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் பேச்சாளர்களுக்கான பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
The post திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சுப் போட்டி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.