- வானிலை மையம்
- சென்னை
- வங்காள விரிகுடா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் பலத்த மழை மற்றும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆ்ய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள்:
* வரும் 15 மற்றும் 17ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், 16ம் தேதியில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.
* 15 ம் தேதி காலை முதல் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் மிதமான முதல் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதாவது, 17ம் தேதி வரை கரடுமுரடான கடல் நிலையாக மாற வாய்ப்புள்ளது.
* தமிழ்நாடு (சென்னை உட்பட) மற்றும் ஆந்திரப் பிரதேசம் கனமழை காரணமாக உள்ளூர் சாலைகளில் வெள்ளம், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேக்கம் மற்றும் முக்கியமாக மேற்கூறிய பிராந்தியத்தின் நகர்ப்புறங்களில் சுரங்கப்பாதைகளையும் மழை நீர் சூழ்ந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.
* கனமழை காரணமாக அவ்வப்போது சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாதநிலை ஏற்படும்.
* சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் முக்கிய நகரங்கள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து இடையூறு மற்றும் பலத்த மழை காரணமாக எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை, வாகனங்கள் பயண நேரம் மற்றும் இடையூறுகள் அதிகரிக்கும்.
* சிறிய படகுகள் மற்றும் படகுகள் போன்ற கடல் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம்.
* சாதாரண சாலைகளுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பழுதடைந்துள்ள மற்றும் பாதிக்கப்படக்கூடிய கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
* உள்ளூர் மற்றும் உயரமான நிலப்பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள், நிலம் மூடுதல், மண் மூடுதல் போன்ற சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
* வெள்ளம் மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் பயிர்களுக்கு சேதம் ஏற்படும். இது சில ஆற்று நீர்ப்பிடிப்புகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கவும் வழிவகுக்கும்.
* கனமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில், ரயில்வே மற்றும் சாலைவழிகள் மற்றும் கடலோர, கடல் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேற்பரப்பு போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.
* பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு முன்பாக உங்கள் பாதையில் போக்குவரத்து நெரிசலை சரிபார்க்கவும். இது தொடர்பாக வழங்கப்படும் ஏதேனும் போக்குவரத்து ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.
* தண்ணீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட கட்டிடங்களில் தங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
The post பலத்த மழை மற்றும் வெள்ளச்சேதம் ஏற்பட வாய்ப்பு; மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வானிலை மையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.