- தென் மண்டல வானிலை ஆய்வு மையம்
- பாலசந்திரன்
- சென்னை
- தென் மண்டல வானிலை ஆய்வு
- வானிலை ஆய்வு நிலையம்
- தென் மண்டலம்
- வானிலையியல்
- சென்டர்
- தென் மண்டல வானிலை மையம்
சென்னை: பருவமழை காலத்தில் மழை பெய்வது இயற்கையான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;
பருவமழை காலத்தில் மழை பெய்வது இயற்கையான நிகழ்வு என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மழையால் ஏற்படும் பாதிப்பு என்பது அந்தந்த பகுதிகளில் உள்ள கட்டமைப்பை பொறுத்ததே. மேலும், அதி கனமழை என்றால், எல்லா பகுதிகளிலும் அப்படி இருக்காது, அப்படியே மழை பெய்தாலும், அந்தப் அந்தப் பகுதிக்கு ஏற்பதான் அது மாறும்.
அக்.16-ல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. அதுபோலத்தான் அக். 16ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களிலும் 22 செ.மீ. மழை பெய்யும் என்று சொல்லிவிட முடியாது. பரவலாக மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றார்.
அதுபோல ஓரிடத்தில் 6 செ.மீ,. மழை பெய்தால் மிதமான மழை, 7 முதல் 11 செ.மீ. வரை பெய்தால் கனமழை என்றும், 12 முதல் 19 செ.மீ. மழை பெய்தால் மிகக்கனமழை என்றும், 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்தால் அதிகனமழை என்றும் குறிப்பிடுவோம். ஒரு ஒரு பகுதிக்கும் கனமழை என்பது மாறுபடும். எனவே சராசரியாகத்தான் சொல்ல முடியும். கனமழையும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்று அர்த்தமல்ல, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதுதான் தகவல் என்றார். எனவே, சென்னை என்றால் ஒட்டுமொத்த சென்னை என நினைத்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறியிருக்கிறார்.
The post கனமழை எச்சரிக்கையால் மக்கள் அஞ்ச வேண்டியதில்லை: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.