தவளக்குப்பம் : புதுச்சேரி மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் இன்றைய நவீன காலத்தில் பறவைகளை பெரும் கூட்டமாக பார்ப்பதென்பது மிகவும் அரிதான காட்சியாகிவிட்டது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இதுதான் தற்போதைய நிலை. இந்த சூழ்நிலையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான புறாக்கள் பெரும் கூட்டமாக பறந்தது பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.
புறாக்களில் மொத்தம் 344 வகைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலும் புறாக்கள் குழுக்களாக வாழவும், தங்கள் சகக்குழுக்களுடன் இறைதேடி செல்லவும் விரும்புகின்றன. அந்த வகையில், நேற்று, தவளக்குப்பத்தில் இருந்து மடுகரை செல்லும் பிரதான சாலையான அபிஷேகப்பாக்கம் அயிற்றூர் மகாதேவர் சிவன் கோயில் எதிரே தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டு மழைக்கு முன்பாக அறுவடை செய்த நிலையில் நிலத்தில் கொட்டிக் கிடக்கும் நெல்மணிகளை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் கூட்டம், கூட்டமாக வந்து தின்று பசியாறின. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பார்த்து ரசித்துச் சென்றனர்.
The post தவளக்குப்பம் அருகே நெல் வயலில் இரைக்காக குவிந்த நூற்றுக்கணக்கான புறாக்கள் appeared first on Dinakaran.