×

திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி பகுதியில் மழையால் வாழை பூ அறுவடை பாதிப்பு

* நார் ஏற்றுமதி பணி அதிகளவில் தொய்வு

* காவிரி கரையோர விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் : திருப்பந்துருத்தி, வடுகக்குடி, நடுக்காவேரி பகுதியில் மழையால் வாழை பூ அறுவடை பாதிப்படைந்துள்ளது. நார் ஏற்றுமதி பணிகள் அதிகளவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரை யோர விவசாயிகள் வேத னை அடைந்துள்ளனர்.தஞ்சாவூர் அடுத்த திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் நெல் சாகுபடியை விட வாழை சாகுபடியை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செய்து வருகின்றனர்.

பொதுவாக புரட்டாசி மாதங்களில் வாழை நடவு செய்யப்படும். அதில் இருந்து 30 நாட்கள் பின்பு ஜப்பசி, கார்த்திகை மாதங்களில் வாழை மரங்களில் பூ பூக்கும். அதனை பறித்து பின்பு மார்க்கெட், உணவு விடுதி போன்ற இடங்களுக்கு எடுத்து சென்று சில்லறை மற்றும் மொத்தமாக விற்பனை செய்வோம். அதேபோல் மொத்த வியாபாரிகளும் நேரடியாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்வார்கள்.

ஆனால் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாழைப் பூக்கள் மரங்களில் அழுகி விடுகிறது. அதேபோல் விவசாய தொழிலாளர்களிடையேவும் சரியாக வருவதில்லை. ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐப்பசி, கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் தற்போது தொடந்து மழை பெய்து வருவதால் வாழை விவசாயம் பாதிப்பு ஏற்படுகிறது. திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்டதிருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி, மருவூர், நடுக்காவேரி உள்ளிட்ட பகுதியில் வாழை விவசாயத்தை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் உள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் வாழை நார் உற்பத்தியும் பாதிப்பு அடைந்துள்ளது. திருவையாறு வாழைக்கு மிகப்பெரிய மவுசு இருக்கு. வாழைநார்க்கும் அதே போல் தான் மழை இல்லை என்றால் எங்க ஊரு வாழை நார் பளபளப்பாக கடினமான தன்மை கொண்டும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். தற்போது பண்டிகை காலங்கள் வர உள்ளதால் அடுத்த நான்கு மாதங்களில் பூக்கள் நல்ல விலைக்கு போகும்.தீபாவளி, மார்கழி மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுதல், பொங்கல் வர உள்ளதால், வாழை நார் நல்ல விலைக்கு போகும். வாழை நார் உற்பத்தி செய்ய ஆள் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் வாழை நாரை பெரிதளவில் தயாரிப்பது இல்லை, ஆனால் எங்க பகுதியில் இதை நம்பி மட்டுமே பல குடும்பங்கள் உள்ளன.

திருவையாறு எடுத்த வடுககுடி கிராமத்தில் மதியழகன் என்கிற விவசாயி சுமார் 50 ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு உற்பத்தியாகும் வாழை நார்களை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். எனவே தமிழக அரசு மற்றும் வேளாண்துறையினர் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து வாழை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.

The post திருவையாறு, திருப்பந்துருத்தி, வடுகக்குடி பகுதியில் மழையால் வாழை பூ அறுவடை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvaiyaru ,Thirupandurthi ,Vadukkudi ,Cauvery ,Thanjavur ,Tirupandurthi ,Vadukakudi ,Nadukaveri ,Tiruvaiyaru ,
× RELATED அறுவடைக்கு 25 நாட்கள் உள்ள நிலையில்...