- இரயில்வே பாதுகாப்பு ஆணையர்
- கவரிபெட்டி ரயில் விபத்து
- திருவள்ளூர்
- ஏ. எம். சவுத்ரி
- பாகமதி
- கவரிப்பேட்டை
- சென்னை ரயில்வே
- ககிரப்பெட்டி ரயில் விபத்து
- தின மலர்
திருவள்ளூர்: கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி விசாரணை நடத்த உள்ளார். பாகமதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரைப்பேட்டை ரயில் நிலைய மேலாளரிடம் விசாரணை நடத்த உள்ளார். சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் வைத்து ரயில் ஓட்டுனர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துகிறார். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் இன்று நிறைவடையும் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது பாகமதி விரைவு ரயில் மோதி விபத்திற்குள்ளானது. சரக்கு ரயில் மீது பாகமதி விரைவு ரயில் மோதியதில் 20 பேர் காயமடைந்தனர்.
The post கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக அக்டோபர் 16, 17 தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை appeared first on Dinakaran.