×
Saravana Stores

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காததால் ரயில் விபத்து: மதுரை எம்பி குற்றச்சாட்டு

சாத்தூர்: ரயில்வே துறையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காததே விபத்துக்கு காரணம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம், சிக்னல் கோளாறு காரணமாக பாக்மதி எஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் 13 பெட்டிகள் கவிழ்ந்து சேதமடைந்தன. இதுகுறித்து நேற்று, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: இந்தியாவில் ரயில்வே துறையில் ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது. ஒன்றிய அரசு பாதுகாப்புக்காக ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்காததே விபத்துக்கு காரணம். ஒரு விபத்தில் இருந்து விடுபடுவதற்குள் மற்றொரு விபத்து நடந்து விடுகிறது. அடிப்படை கட்டமைப்பை ரயில்வே துறை செய்யாமல் இருப்பதும் விபத்துகளுக்கு காரணம். இவ்வாறு கூறினார்.

The post பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்காததால் ரயில் விபத்து: மதுரை எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : EU government ,Madurai ,Chathore ,M. Madurai ,B. Cu. Venkatesan ,Kawarappettai train station ,Chennai ,Bakhmati ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...