- அண்ணாமலை பல்கலைக்கழகம்
- சென்னை
- ராமதாஸ்
- பாலமகா
- தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்
- பட்டதாரி ஆசிரியர் தேர்வு
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்
- அண்ணாமலை பல்கலைக்கழகம் பி. ஏ.
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிரு்ந்தது. இது தவறு என்பதையும், அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம் பி.ஏ. தமிழ் பட்டத்திற்கு இணையானது தான் என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதை ஏற்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் அரசு வேலைவாய்ப்புகளில் பி.ஏ. தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு சமமானது என்று அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பெரும் சிக்கல் தீர்ந்திருக்கிறது. இதனை வரவேற்கிறேன்.
The post அண்ணாமலை பல்கலையில் பி.லிட் பட்டத்திற்கு அங்கீகாரம்: ராமதாஸ் வரவேற்பு appeared first on Dinakaran.