×

ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆயுதபூஜை

நாகர்கோவில், அக். 11: ஆயுதபூஜை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசு நிறுவனங்களில் நேற்று ஆயுதபூஜை விழா நடந்தது. நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்று மதியம் ஆயுதபூஜை விழா நடந்தது. விழாவிற்கு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி தலைமை வகித்தார். பூஜையின் போது அங்கு பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அழகேசன், ஜெரோலின், மதுகுமார், சுனில்குமார், யுவராணி, அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் சிவன்பிள்ளை, தலைவர் கண்ணன், சிஐடியு நிர்வாகி சுரேஷ்குமார், பிஎம்எஸ் மாவட்ட தலைவர் குமாரதாஸ் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், பணிமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

The post ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஆயுதபூஜை appeared first on Dinakaran.

Tags : Ayudha Puja ,Ranithottam Government Transport Corporation Workshop ,Nagercoil ,Government Transport Corporation ,Ranithottam ,Ranithottam Government Transport Corporation ,
× RELATED நெசவாளர் காலனியில் சாலைப்பணி மேயர் தொடங்கி வைத்தார்