×

அம்பலச்சேரி பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

சாத்தான்குளம், டிச.30: சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காய்ச்சலை தடுக்கும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், டெங்கு கொசு மூலம் பரவு நோய்கள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் குளோனேரிசன் செய்யப்பட்டது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கட்டாரிமங்கலம் ஊராட்சி தலைவர் கீதா கணேசன், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் செய்திருந்தனர்.

The post அம்பலச்சேரி பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nilavembu ,Ambalacheri School ,Satankulam ,Ambalacheri Uratchery Union Secondary School ,Government Primary Health Centre ,Chaliputur ,Jeeva ,Supply ,Dinakaran ,
× RELATED புளியங்குளத்தில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்