- தீக்ஷிட்
- ராமதாஸ் விளாசல்
- திண்டிவனத்தில்
- Bamaka
- ராமதாஸ்
- திலாபுரம்
- விழுப்புரம் மாவட்டம்
- பல்கலைக்கழக மானியக் குழு
- - அதிபர்
- குழு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தீக்ஷிதர்
- தின மலர்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்களை நிரப்பவேண்டும். துணைவேந்தர்கள் தேர்வு குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதியை நியமிப்பதில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான பிரிவால்தான் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர்களை நியமிக்காமல் போனால் 11 பல்கலைக்கழகங்கள் முற்றிலுமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது.
இதனால் கிராமப்புற மக்கள் மின் கட்டணத்தை கட்டுவது சாத்தியமில்லை. எடப்பாடி அருகே புனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது. அதனை வீடியோ எடுத்த வி.சி.கவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோயில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. கோயில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post மைதானமாக கோயிலை மாற்றுவதா? தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆடியது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் விளாசல் appeared first on Dinakaran.