×
Saravana Stores

கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவு: முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவுக்கான முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியானது. இந்திய புவியியல் ஆய்வு மையம் சார்பாக முதற்கட்ட பிரத்யேக ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது; கூனிபட்டி அருகே உள்ள நீர்நிலையில் இருந்து தண்ணீர் அதிகளவில் பூமிக்குள் நுழைந்துள்ளதால் பிளவு ஏற்பட்டிருக்கலாம். நிலப்பிளவு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் இருந்து 45 கி.மீ. தொலைவில் கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் நிலப் பிளவு ஏற்பட்டிருந்த நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் புவியியல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

The post கொடைக்கானலில் ஏற்பட்ட நிலப்பிளவு: முதற்கட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Indian Geological Survey ,Koonipatti ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் செல்லும் சாலையில் நிலச்சரிவு