×

வீடு இடிந்து விழுந்தது

 

8ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பெய்த போது வேப்பந் தட்டை தாலுக்கா , அனுக்கூர் தெற்கு அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி மனைவி அய்யம் மாள் (76)என்ற மூதாட்டியை அன்று இரவு அவரது மகனான அரசு ஜீப் டிரைவர் மனோகர் முன்னெச்சரிக்கையாக 100 மீட்டர் அருகே உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நேற்று (9ஆம் தேதி) காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த அந்த மூதாட்டியின் வீடு முற்றிலும் இடிந்து சரிந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே அழைத்துச் சென்றிருந்ததால் அய்யம் மாள் உயிர் தப்பியுள்ளார்.

The post வீடு இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Ramasamy ,Ayyam Mal ,Anna Nagar, South Anna Nagar ,Veppan Taluka, Anukur ,Perambalur district ,
× RELATED தென்னக அயோத்தியில் வண்ண ஓவிய இராமாயணம்