×

பஸ் ஸ்டாண்டில் கிடந்த சடலம்

 

ராஜபாளையம் அக்.10: ராஜபாளையம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று இறந்து கிடந்தார். தகவலறிந்த தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா மகன் குருசாமி(60). திருமணமாகவில்லை, உடல் நலம் பாதிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தது தெரியவந்தது. இறந்த குருசாமிக்கு இரண்டு சகோதரர்கள், சகோதரிகள் இருக்கின்றனர் என தெரியவந்தது.

The post பஸ் ஸ்டாண்டில் கிடந்த சடலம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,South Police ,Dinakaran ,
× RELATED பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறல் சிறப்பு எஸ்ஐ சஸ்பெண்ட்