- ஊட்டி வேளாண் அறிவியல் நிறுவனம்
- ஊட்டி
- பொன்விழா
- வேளாண் அறிவியல் நிலையம்
- விழா
- நீலகிரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம்
- கோயம்புத்தூர்
- கவரட்டி
- கரிக்கையூர்
ஊட்டி, அக். 10: வேளாண் அறிவியல் நிலைய பொன்விழாவையொட்டி கோவையில் இருந்து நீலகிரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பொன்விழா ஜோதி கடந்த 5ம் தேதி வந்தடைந்தது. இந்த விழாவின் அங்கமாக கவரட்டி மற்றும் கரிக்கையூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை, தேனீ வளர்ப்பு மலைப்பயிர்களுக்கு பயிர் சுழற்சி முறைகள் மற்றும் மல்பெர்ரி சாகுபடி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா, விஜயகுமார், வினோத் குமார், மணிவாசகம், தேன்மொழி, சண்முகம், செந்தில்ராஜா மற்றும் ஜெய்ஸ்ரீதர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஐம்பது ஆண்டுகள் வேளாண் அறிவியல் நிலையங்களின் சாதனைகள் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நீலகிரி வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்டம் மற்றும் செயல்பாடுகளை பற்றியும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து நேற்று பொன்விழா ஜோதி திருப்பூர் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post ஊட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி appeared first on Dinakaran.