×

பாமகவினர் மனித சங்கிலி

பள்ளிபாளையம், அக்.10: பாமக தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பள்ளிபாளையத்தில் பாமகவினர் மனித சங்கிலி நடத்தினர். நிகழ்ச்சியில், மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட பாமக அமைப்பு செயலாளர் உமாசங்கர் தலைமையில், போதை பழக்கத்தின் கேடுகளை விளக்கி கோஷமிட்டனர். இதில், மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, நிர்வாகிகள் பழனியப்பன், கணேசன், கராத்தே சேகர், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜெயமுருகன், நகர செயலாளர் ராஜசேகர், நகர தலைவர் மெக்கானிக் ராஜா, முருகேசன், ராஜேந்திரன், வக்கீல் மகாலிங்கம், சின்னதுரை, இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன், மாணவரணி தலைவர் வேல்முருகன், பன்னீர், அண்ணாமலை, காளிதாஸ், மணி, மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பாமகவினர் மனித சங்கிலி appeared first on Dinakaran.

Tags : Bamakavinar ,Pallipalayam ,BAMA ,Anbumani ,Bamakas ,Umashankar ,Namakkal ,BAMAK ,
× RELATED .69 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்