×

கடவுளின் அவதாரம் என்று இந்து மக்களை ஏமாற்றி வருகிறார் போலி சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்புகள் புகார்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் சிவமுருகன் என்பவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 27ம் தேதி என்னுடையே வீட்டில் இருந்த போது எனது செல்போனில் யூப்டியூப் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அன்னபூரணி அரசு அம்மா என்ற யூப்டியூப் சேனலில், அன்னபூரணி அரசு என்ற பெண் தன்னை கடவுளின் அவதாரம் என்றும், அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தியின் அவதாரம் என்றும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரகடனப்படுத்தி வருகிறார்.சம்பந்தப்பட்ட அன்னபூரணி அரசு என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காடசி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தன்னுடைய கணவரோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது என்றும், தன்னுடைய கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த  வேறொரு பெண்ணின் கணவரான அரசு என்பவருடன் தான் வாழ போகிறேன் என்றும், பொது வெளியியே பகிரங்கமாக தன்னுடைய கள்ளக்காதலை பற்றி சிறிதும் கூச்சமின்றி தனி மனித ஒழுக்கமின்றி நடந்து கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.தனி மனித ஒழுக்கமின்றி வாழ்ந்து தன்னை கடவுளின் அவதாரம் என்று பொய் பரப்புரை செய்து இந்து மக்களை கடவுள் பெயரால் ஏமாற்றி தொடர்ந்து மூளை சலவை செய்து வரும் போலி பெண் சாமியார் அன்னபூரணி அரசு என்பவர் மீது ‘மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க முயற்சித்தல், மதம் தொடர்பான விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல், மதங்களை மையப்படுத்தி குற்றத்தில் ஈடுபடுதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* பெண் சாமியாரை கைது செய்ய வேண்டும்: இந்துமக்கள் கட்சியினர் மனுதிடீரென பிரபலமான பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய கோரி, உதவி காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ்பச்சோராவிடம் இந்து மக்கள் கட்சியினர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில், புகார் மனு அளித்தனர். அதில், இந்து மத நம்பிக்கையையும் சடங்குகளையும் அவமானப்படுத்தும் விதமாக, அவர் செயல்பட்டு வருவதாக கூறி, உடனடியாக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது….

The post கடவுளின் அவதாரம் என்று இந்து மக்களை ஏமாற்றி வருகிறார் போலி சாமியார் அன்னபூரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்புகள் புகார் appeared first on Dinakaran.

Tags : Annapoorani ,God ,Chennai ,Akila Bharat ,Hindu People's Party ,Founder ,President ,Shivamurugan ,Police Commissioner's Office ,Vepperi, Chennai ,
× RELATED இறைவன் வானவர் உரையாடல்!