×
Saravana Stores

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதியை மீறிய இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம்

துபாய்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது. 9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா, துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 3 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி விருதை பெற்றார்.

முன்னதாக அவர், பாகிஸ்தான் வீராங்கனை நிதா தரை போல்டாக்கியதும், ஆக்ரோஷமாக வெளியே போ என்பது போல் சைகை காட்டினார். இது வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய செயல் என்று கண்டித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை விதித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுக்குள் அவரின் தகுதி இழப்பு எண்ணிக்கை 4-ஐ எட்டினால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதியை மீறிய இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : ICC ,Arundati Reddy ,Pakistan team ,DUBAI ,VIRANGAN ARUNTHI REDDY ,'S 20 OVER WORLD CUP CRICKET ,SHARJAH, DUBAI ,UNITED ARAB EMIRATES ,Pakistan ,Dinakaran ,
× RELATED ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை இறுதி...