கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று இமெயில் வந்தது. இதில், ‘‘பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. உடனே வெளியேறாமல் இருந்தால் வெடித்து விடும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை வெளியேற்றி வளாகத்தில் நிறுத்தினர். பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பெற்றோர்கள் அங்கே குவிந்தனர். மாநகர போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து 2 மணி நேரம் சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதுமில்லை என தெரியவந்தது. பின்னர் மாணவர்கள் வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே 3 பள்ளிகள், 2 ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிரட்டல் மெயில் வருவது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கோவையில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.