×
Saravana Stores

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை சற்று அதிகரிப்பு

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரத்து குறைவு மற்றும் சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகளின் வருகை குறைவால் அனைத்துப் பூக்களின் விலை சற்று அதிகரித்து விற்பனையானது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் வரத்து குறைவு மற்றும் சென்னை புறநகர் சில்லறை வியாபாரிகள் வருகை குறைந்ததால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இதில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கும், ஐஸ் மல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.450க்கும், அரளி பூ ரூ.200க்கும், சாமந்தி ரூ.120க்கும், சம்பங்கி ரூ.150க்கும், பன்னீர் ரோஸ் ரூ.70க்கும், சாக்லேட் ரூ.160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், மேலும் ஆயுத பூஜை, பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் இன்று முதல் அனைத்து பூக்களின் விலை மீண்டும் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலை சற்று அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,market ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை குறைவு