- சென்னை
- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் மினி-சாலைகள்
- கிண்டி
- நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம் பயிற்சி மையம்
- தாம்பரம்
- ஆவடி
- அமைச்சர் ஏ.
- வேலு
- தின மலர்
சென்னை: கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே சிறுபாலங்கள், வடிநீர்கால்வாய்கள், நீழ்வழிப்பாதைகள் ஆகியவை எந்ததெந்த இடங்களில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது, சுத்தம் செய்யப்படாத பகுதிகளை உடனே கண்டறிந்து சுத்தம் செய்யப்பட வேண்டும். பல்லாவரம்-துரைப்பாக்கம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையும் கிழக்கு கடற்கரை சாலையும் இணைக்கும் சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மறைமலை அடிகளார் பாலம் இரும்புலியூர், வண்டலூர், முடிச்சூர், வாலாஜபாத் சாலை மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில் நிறைவுற்ற பணிகள், எஞ்சியுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவாக அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் உதவக் கூடிய மருத்துவமனைகள் மற்றும் அவசர உதவி நிறுவனங்கள் உள்ள சாலைகளில் சிறப்பு கவனம் செலுத்தி நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத்துறையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தாம்பரம் சோமங்கலம் நந்தம்பாக்கம் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் செயலாளர் செல்வராஜ், முதன்மை இயக்குநர் செல்வதுரை, தலைமைப்பொறியாளர் சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் சரவணன், தலைமைப்பொறியாளர் பழனிவேல், சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர்கள், துறைசார்ந்த அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத் துறையால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது : அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை appeared first on Dinakaran.