×

லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சிங்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 13 ஆண்டுகளுக்கு பின் திரிஷா நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், லியோ படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக யார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பற்றி தான்.

நாம் அனைவரும் சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற நடிகர்கள் தான் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லையாம். இப்படத்தில் சிங்கம் ஒன்றை நடிக்க வைத்துள்ளார்களாம். விஜய்க்கு அடுத்தபடியாக இந்த சிங்கம் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிங்கத்தை அனிமேஷன் செய்ய ரூ. 15 கோடி செலவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கண்டிப்பாக இந்த சிங்கத்தின் காட்சி வெறித்தனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

The post லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் சிங்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Singam ,Vijay ,Lokesh Kanagaraj ,Trisha ,Sanjay Dutt ,Arjun ,Miskin ,Gautham Menon ,Singham ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தியேட்டரில் திடீரென்று உயிரிழந்த ரசிகர்