×

நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல்

மண்டபம் : மண்டபத்தில் பால் வியாபாரம் செய்து வந்த மூதாட்டியை அடித்து கொலை செய்து விட்டு, நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மண்டபம் முகாம் முனைக்காடு பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணமூர்த்தி, இவரது மனைவி சின்னப் பொன்னு (எ) பேச்சியம்மாள்(62). பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வீடுகளுக்கு பால் வியாபாரம் செய்து முடிந்து வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார்.

அப்போது, மர்ம நபர்கள் முனைக்காடு கிராமம் நுழைவுப் பகுதியில் வைத்து சின்னப் பொன்னுவை தாக்கியுள்ளனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.காயமடைந்த அவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் கிகிச்சைக்கு வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது சின்னப்பொன்னு செல்லும் வழியில் இறந்துவிட்டார். மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்டு பல மணி நேரம் ஆகியும் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மண்டபம் பகுதியில் ராமேஸ்வரம் – மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னப்பொன்னுவின் உறவினர்கள் மறியலில் நேற்று ஈடுபட்டனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி உமாதேவி பேச்சு வார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் கைது செய்வதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். போலீசார்கள் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நகையை பறித்துக்கொண்டு மூதாட்டி அடித்து கொலை உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Krishnamurthy ,Mandapam Camp Munaikadu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் பன்றி திருடிய 2 பேர் கைது