×

அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் உலக ஆசிரியர் தினம்

 

அவிநாசி, அக்.7: உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி ஆசிரியர்களுக்கு தபால் அட்டையில் வாழ்த்துகளை அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் நளதம் தொடங்கி வைத்தார்.

இதில் வணிக நிர்வாகவியல் மாணவர்கள் 75 பேர் தாங்கள் படித்த பள்ளி ஆசிரியர்களை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு 75 தபால் அட்டைகளில் வாழ்த்துகளை அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியை, பேராசிரியர்கள் தியாகராஜன், சரோஜா, ஷாலினி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

The post அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் உலக ஆசிரியர் தினம் appeared first on Dinakaran.

Tags : World Teacher's Day ,Avinasi Government Arts College ,Avinasi ,World Teachers' Day ,Government Arts and Science College ,Principal ,Naladham ,Avinasi Government Arts ,College ,Dinakaran ,
× RELATED இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு